சென்னை: சென்னையில் உள்ள பிரபல பள்ளியான பி.எஸ்.பி.பி பள்ளியில் ஆசியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக திமுக எம்.பி.கனிமொழி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, பள்ளி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
மறைந்த நடிகர் ஒய்ஜி பார்த்தசாரதிக்கு சொந்த கே.கே. பி.எஸ்.பி.பி பள்ளியில் வணிக ஆசிரியர் ஒருவர் மாணவர்கள் மீது பாலியல் ரீதியாக பிரச்சினை செய்ததாக சமுக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து, திமுக எம்.பி. கனமொழியும் டிவிட் பதிவிட்டிருந்தார். அதில், மாணவர்களிடமிருந்து வரும் புகார்களுக்கு எதிராக செயல்படத் தவறிய பள்ளி அதிகாரிகள் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இதையடுத்து, பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் சார்பில், அதன் பின்சிபால் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஸ்ரீலா ராஜேந்திரா ஆகியோர் விளக்க கடிதம் அனுப்பி உள்ளனர். அதில்,
அன்புள்ள பெற்றோர் & மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்!
எங்கள் கே.கே.என் நகர் பள்ளியின் ஆசிரியர் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ள பதிவுகளை சோசியல் மீடியா மற்றும் ஊடகங்கள் மூலம் நீங்கள் சந்தித்திருக்கலாம்
இதுபோன்ற எந்தவொரு நடத்தையிலும் எங்கள் பள்ளிக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதை நாங்கள் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறோம்.
இதுபோன்ற தகவல்கள், எங்கள் மாணவர்களின் உடல், உணர்ச்சி மற்றும் உளவியல் நல்வாழ்வை மோசமாக பாதிக்கிறது.
மேலும், ஊடகங்களில் குறிப்பிடப்பட்டதற்கு மாறாக, இந்த வகையான குற்றச்சாட்டுகள் இதுவரை பள்ளியி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் கவனித்து வருகிறோம், இந்த விவகாரத்தில் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.
எங்களுக்கு மாணவர்களன் நலன் முக்கியம். அதுவே எங்கள் முன்னுரிமையாக இருக்கும். இதுகுறித்து சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறோம்.
பாதுகாப்பாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.