திருவனந்தபுரம்:
பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு தொடர்பாக கம்யூனிஸ்டு தலைவர் கொடியேறி பாலகிருஷ் ணன் மகனை விசாரிக்க மும்பை போலீசார் கேரளா வருகை தந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநில சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் கொடியேரி பாலக்கிருஷ்ணன். இவரது மகன் பினோய் கொடியேரி. இவர், மும்பை பெண் ஒருவரை திருமணம் செய்வதாக கூறி 6 ஆண்டுகள் தம்பதியர் சகிதமாக வாழ்ந்து வந்த நிலையில், அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மும்பை பெண், தன்னை பாலகிருஷ்ணன் 6 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்து வந்தாக குற்றம் சாட்டி புகார் கொடுத்துள்ளார், அவர் அளித்த புகாரின் பேரில் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பெண் அளித்துள்ள புகார் மனுவில், என்னை பினோய் பாலகிருஷ்ணன் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்து வந்தார் என்றும்,அவரால் எனக்கொரு குழந்தையும் பிறந்தது. தற்போது என்னை திருமணம் செய்து மறுத்து வருகிறார் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினோய் வினோதினி பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார்.
ஆனால், அந்த பெண்ணின் புகார் குறித்து தெரிவித்துள்ள மும்பை காவல் துறை அதிகாரி ஷைலேஷ், துபாயில் பார் ஒன்றில் நடனக் கலைஞராக புகார்தாரர் பணிபுரிந்தபோது, பினோய் அவரை திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்ததாக புகார் வந்துள்ளது. அதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக விசாரணை நடத்தவே மும்பை போலீசார் கேரளா வந்துள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளார்.
கம்யூனிஸ்டு தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினோய் வினோதினி பாலகிருஷ்ணன் ஏற்கனவே துபாயில் சுற்றுலா நிறுவனம் ஒன்றில் ரூ.13 கோடி ஏமாற்றியதாக பினோய்க்கு எதிராக மோசடி வழக்கு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பினோய் துபாய் வர அந்நாட்டு நீதி மன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.