சென்னை: பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை என்றும் 90ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார். குற்றவாளி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால், 11 குற்றங்களுக்கும் தனித்தனியாக தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய யார் அந்த சார், விவகாரத்தில் அண்ணா பல்கலை மாணவி வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது. அதன்படி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதிப்பு. சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக்கூடாது என உத்தரவிட்டதுடன், மேலும், ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தார் நீதிபதி.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் கைதாகி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ள முன்னாள் திமுக பிரமுகர் ஞானசேகரன் மீது 36 வழக்குகள் உள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. சரித்திர பதிவேடு குற்றவாளியான அவர் திமுக அமைச்சர்களுடன் தொடர்பான தொடர்புகளை வைத்திருந்ததால், அவனது குற்றச்செயல்கள்மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டதால், அண்ணா பல்கலைக்கழக மாணவியையே பாலியல் வன்புணர்வு செய்யும் வகையில் அவரது நடவடிக்கை உயர்ந்துள்ளது.
இந்த விவகாரத்தில் மாணவியின் புகார் வெயிான நிலையில்தான், அதை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தியதுடன், நீதிமன்றமும் தலையிட்டு, காவல்துறையை கடுமையாக கடிந்துகொண்டதுடன், சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரியில் விசாரணைகள் நடைபெற்று, மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்தது. இந்த வழக்கில், ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில், இன்று ஞானசேகரனுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன என்பது குறித்து இன்று நீதிபதிகள் தண்டனை விவரங்களை தெரிவிக்க உள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதுபோல இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் இன்று (ஜுன் 2) அறிவிக்கப்பட உள்ள நிலையில், புழல் சிறையில் இருந்து ஞானசேகரன் பலத்த போலீஸ் காவலுடன் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், காலை 10.30 மணி அளவில் தண்டனை விவரங்களை நீதிபதி அறிவித்தார்.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு குறையாத ஆயுள் தண்டனை விதிப்பதாக தெரிவித்தவர், சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கப்படக்கூடாது என உத்தரவிட்டதுடன், ரூ.90 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
#யார்_அந்த_SIR ? என்ற கேள்வி, இன்னும் அப்படியே இருக்கிறது! எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்
யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!