சென்னை: தமிழ்நாட்டில், கடந்த 3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள்மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு உள்ளதாகவும், இதில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 23 ஆசிரியர்கள் அதிரடி பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அதிகரித்து வரும் போதை பொருள் நடமாட்டம் என்று கூறப்படுகிறது. போதை பொருள் நடமாட்டத்தை காவல்துறை கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக மாநிலம் முழுவதும் ஏராளமான பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.

இதன் தொடர்சியாக பள்ளிகளிலும், காவல்துறையிலும்கூட பாலியல் சபவங்கள் நடைபெறுகின்றன. வேலியே பயிரை மேய்வது மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய காவல்துறையினரே, சக பெண் காவலர், புகார் கொடுக்க வரும் பெண்களிடம் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல, பள்ளிகளில், மாணவ மாணவர்களுக்கு குருவாக இருக்கும் ஆசிரியர்களே பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது பெற்றர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்தி உயர்நீதிமன்றமும் தமிழ்நாடு அரசை பணித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு சார்பில், மாணவ, மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திட பல்வேறு விழிப்புணவர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதற்காக, . மனம் ஹெல்ப் லைன், பெண்கள் ஹெல்ப்லைன், 181 போன்றை அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், சமீப காலமாக, பெண் ஆசிரியர்கள் மூலம் மாணவிகளிடையே நல்ல, தீய தொடுதல் குறித்து விழிப்புணர்வு மற்றும் போக்சோ சட்டம் குறித்து விளக்கம் அளித்திடும் நடவடிக்கையும் நடைபெற்று வருகிறது.
மேலும், பள்ளி, கல்லுாரி அருகில் போதைப்பொருட்கள் விற்பனையை கண்டறிந்து, அவற்றை தடுத்திட நடவடிக்கை, போதை பழக்கத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு முறையான ஆலோசனைகள் வழங்க மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்,. அவர்கள் மூலமாகவும் பள்ளி மாணவிகளுக்கு ஆலோசனைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறார்.
மேலும், கல்வி நிறுவனங்கள் அருகில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். கேமரா பதிவுகளின் சேமிப்பு திறனை 25 நாட்கள் வரை இருக்கும் வகையில் அமைத்திட வேண்டும். கலை நிகழ்ச்சிகள் நடக்கும் இடம், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., முகாம்கள் நடைபெறும் இடங்களை கண்காணித்தல் வேண்டும். இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைக்கு, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் பொறுப்பு அலுவலர்களை நியமித்திட வேண்டும். அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பெற்றோர்களுடன் இணைந்து செயல்பட்டு மாணவ, மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். அரசு அனுமதியுடன், அங்கீகரிக்கபட்ட நிகழ்சிகளில் மட்டுமே பங்கேற்க மாணவ, மாணவிகளை அனுமதிக்க வேண்டும். ஏதேனும் தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டாலோ, மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு சூழ்நிலை ஏற்பட்டாலோ உடனடியாக நேரிடையான காவல்துறை மூலம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். இதுதொடர்பாக புகார்கள் 9498410581 வாட்ஸ் அப், கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 வாயிலாக தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். தவறு செய்தால் தண்டனை என்பதை உருவாக்கிட வேண்டும். குற்றம் இல்லாத நிலையினை ஏற்படுத்திட வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகான, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பள்ளிகளில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதில், 36 சம்பவங்கள் பள்ளியின் வெளியில் நடைபெற்றுள்ளன.
இதுதொடர்பான புகாரின் பேரில், சிறையில் 11 பேர் உள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி குற்றவாளிகள் என தண்டிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத 23 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
போக்சோ வழக்கில் 53 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதில், புகார் உறுதி செய்யப்பட்ட நிலையில், முதல் கட்டமாக 23 பேர் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள், திருச்சி, திண்டுக்கல், நீலகிரி, புதுவை, விழுப்புரம், தர்மபுரி, நெல்லை மாவட்டங்களில் தலா ஒரு ஆசிரியரும், தொடக்க கல்வித்துறையில் 15 ஆசிரியர்கள் என மொத்தம் 23 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் சான்றிதழ்களை ரத்து செய்யும் பணியில் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.