திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், தன்னுடன் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று, டார்ச்சர் செய்த உதவி இயக்குநரை நடிகை ஒருவர் பொது மக்கள் முன்னிலையில் வைத்து கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர், நடிகை அமன் சந்த். தற்போது இவர் திரைப்படத்தில் நடிக்க முயற்சித்து வருகிறார்.
இந்த நிலையில், பாலிவுட்டில் உதவி இயக்குநராக பணிபுரியும் தீபக் மிஸ்ரா என்பவரை, நடிக்கும் வாய்ப்புக்காக காபி ஷாப் ஒன்றில் சந்தித்தார்.
அப்போது தீபக் மிஸ்ரா, “திரைப்பட வாய்ப்பு வேண்டும் என்றால், தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அமன் சந்த், காபி ஷாப்பில் வைத்து பொதுமக்கள் முன்னிலையிலேயே தீபக் மிஸ்ராவை கன்னத்தில் அறைந்தார்.
இதை அங்கிருந்த யாரோ ஒருவர், தனது செல்போனில் வீடியோ எடுத்து வலைதளத்தில் பதவிட, தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ:
https://www.youtube.com/watch?v=ghZkfzwju4Y
Patrikai.com official YouTube Channel