டாககூடமாக எதையாவது செய்வது, அல்லது பேசுவது என்று சர்ச்சையில் சிக்குவதே சல்மான்கான் வழக்கம்.
சமீபத்தில் டி.வி. ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “வரவிருக்கும் எனது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது. இதனால் மனமும் உடலும் சோர்ந்து போய்விட்டது” என்றார். அதோடு விட்டிருக்கலாம், அடுத்ததாக, “பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் போல உணர்கிறேன்” என்றார்.
a
இதுதான் விவகாரமாகிவிட்டது. அவரது இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பெண்கள் அமைப்புகள் சில குரல் கொடுத்தன. அதை சல்மான்கான் கண்டுகொள்லவில்ல. இப்போது,  “சல்மான்கான் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று மகளிர் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
“அப்படி மன்னிப்பு கேட்கவில்லை என்றால்  சம்மன் அனுப்பப்படும்” என்றும் எச்சரித்திருக்கிறது.
அதே பேட்டியில் சல்மான்கான், “சிகரெட், மது, காபி ஆகிய கெட்ட பழக்கங்களை என்னால் விட முடியும் ஆனால் பெண் துணையை மட்டும் விடவே முடியாது” என்று சொன்னதும் சர்ச்சையாகி இருக்கிறது.
ஆனால் இதுவரை சல்மான்கான் மன்னிப்பு கேட்கவில்லை. மவுனம் காத்து வருகிறார்.