சென்னை

யங்கரவாதிகள் ஊடுருவல் தகவலை அடுத்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்றிரவு முதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்துள்ள செய்திகளை அடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தலைநகர் சென்னை நகரென்க்கும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கியமாக இரவில் அனைத்து சாலை சந்திப்புக்கள், முக்கியமான பகுதிகள், அரசியல் சம்பந்தப்பட்ட இடங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி சென்னை விமான நிலையம், ரெயில் நிலையங்கள், உயர்நீதிமன்ற வளாகம், கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தீவிர பாதுகாப்பு இடப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் பொதுமக்கள் இந்த இடங்களில் தீவிர  சோதனைக்குப் பிறகே அனுமதிக்கபடுகின்ரனர். சுமார் 10 ஆயிரம் காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் விசாரணையும் நடைபெறுகிறது.

நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு பயங்கரவாதி தப்பிச்  செல்ல முயல்வதாகச் செய்திகள் வந்தன. அதையொட்டி பேருந்து நிலைய பாதுகாப்பு மிகவும் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வதந்தி என பின்னால் தெரிய வந்தது. ஆயினும் மக்கள் கடும் பிதியில் உள்ளனர் இதையொட்டி அந்தப் பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.