புவனேஸ்வர்:
த்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கறுப்புக் கொடி காட்டி, முட்டை மற்றும் மை வீசிய காங்கிரஸ் தொண்டர்களை காவல்துறையினர்  இன்று கைது செய்தனர்.
கடந்த அக்டோபர் 3ஆம் தேதி லக்கிம்பூர் கெரி வன்முறையில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா ஈடுபட்டதாகக் கூறி காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய விவசாய சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய நான்கு விவசாயிகள் போராட்டத்தின் போது வாகனம் மோதி கொல்லப்பட்டனர். விவசாயிகளை வெட்டிய வாகனம் ஒன்றில் ஆஷிஸ் மிஸ்ரா இருந்ததாகக் கூறப்படுகிறது.