கொரோனா வைரஸ் குறித்த ஏழு மூடநம்பிக்கைகளும் ஏழு உண்மைகளும்
❌ மூடநம்பிக்கை 1❌
நல்லெண்ணெயை கிருமி நாசினியாக பயன்படுத்தி உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டால்/உட்கொண்டால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது.
தவறு
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கவ நல்லெண்ணெய் உடல் முழுவதும் தேய்ப்பது பலனளிக்காது .
✅ உண்மை
✅அடிக்கடி கைகளை சோப் போட்டு அல்லது ஆல்கஹால் சானிடைசர் மூலம் கழுவிவருவது பலனளிக்கும்
✅பொது இடமாக இருந்தால் கைகள் அதிகம் படும் இடத்தை க்ளோரின் சார்ந்த கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது பலனளிக்கும்
✅தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டை/ டிஸ்யூ பேப்பர் போன்றவற்றை கொண்டு வாயை மூடி தும்முவது பலனளிக்கும்
✅ சளி / இருமல் / தும்மல் இருப்பவர்கள் மாஸ்க் அணிவது பலன் தரும்
❌ மூடநம்பிக்கை 2❌
கொரோனா வைரஸ் வருவதை தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் ஆண்டிபயாடிக் மாத்திரைகள் உட்கொள்ளலாமா???
தவறு
கொரோனா என்பது ஒரு வைரஸ். வைரஸை கொல்வதற்கு வைரஸ் கொல்லி மருந்துகள் மட்டுமே பயன் தரும்.
ஆண்டிபயாடிக்குகள் என்பவை பாக்டீரியாக்களை கொல்லும் தன்மை கொண்டவை எனவே, வைரஸ் தொற்றுக்கு ஆண்டிபயாடிக்குகள் பலனளிக்காது
உண்மை
சீனா , தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு எச்.ஐ.விக்கு எதிரான ப்ரோடியேஸ் நொதியை தடுக்கும் மருந்துகளை உபயோகித்து நோயாளிகளிடம் முன்னேற்றம் கண்டு வருகிறார்கள்.
இருப்பினும் இந்த மருந்துகள் குறித்து இன்னும் தீவிர ஆராய்ச்சிகள் தேவைப்படுவதால் உலக சுகாதார நிறுவனம் அந்த மருந்துகளை அங்கீகரிக்க காலம் ஆகும்.
❌ மூடநம்பிக்கை 3❌
சீனாவில் இருந்து வரும் பார்சல்கள்/ கண்டெய்ணர்கள்/ கடிதங்கள் போன்றவற்றில் கொரோனா வைரஸ் தொற்று இருக்கும்.
தவறு.
கொரோனா வைரஸ் மனிதன் அல்லது அதற்குரிய வாழத்தகுந்த விலங்கு இவற்றின் உயிருள்ள உடல்களைத் தவிர வெளி சூழ்நிலையில் சில மணிநேரங்களுக்கு மேல் தாக்குபிடிக்க இயலாது.
✅உண்மை
சீனாவில் இருந்து வரும் பார்சல்கள் யாவும் பல மணிநேரங்கள் முதல் பல நாட்கள் கழித்து நம்மை வந்து சேருகின்றபடியால் கொரோனா வைரஸ் கட்டாயம் அந்த பார்சல்களில் தொற்று ஏற்படுத்தும் வண்ணம் உயிரோடு இருக்காது. ஆகவே டோண்ட் வொர்ரி..
❌ முடநம்பிக்கை 4❌
மவுத்வாஷ் வாங்கி அடிக்கடி வாய் கொப்புளித்துக்கொண்டே இருந்தால் / தொண்டையை உலராமல் பார்த்துக்கொண்டால் கொரோனா தொற்று ஏற்படாது .
தவறு
✅உண்மை
மவுத்வாஷ் வாங்கி அடிக்கடி வாய் கொப்புளித்தாலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க இயலாது. கொரோனா வைரஸ் சுவாசப்பாதை வழியாக பரவுவதே இதற்குக் காரணம். அடுத்தவர் இருமிய இடத்தில் அந்த கிருமிகள் சளியின் நுண்துகள்களில் ஒட்டிக்கொண்டு இருக்கும். அதை மற்றவர் சுவாசத்தால் உள்ளே சென்று விடும்.
தண்ணீர் மூலம் பரவும் தொற்றுகள் பெரும்பாலும் தொற்று நிரம்பிய தண்ணீரை குடிப்பதால் வரும். கொரோனாவுக்கு இது பொருந்தாது. கொரோனா காற்றின் மூலம் பரவும் வைரஸ் தொற்றாகும்.
❌ மூடநம்பிக்கை 5❌
நியூமோனியாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கொரோனா வைரஸ் மூலம் உருவாகும் நிமோனியாவை தடுக்கும்.
தவறு..
✅உண்மை
கொரோனா வைரஸ் என்பது புதிய வகை வைரஸாகும். மனிதர்கள் இதுவரை கண்டிராத வகை இது.
அதற்காகவே இதற்கு “novel” என்ற பெயர் இடப்பட்டுள்ளது.
இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி கிடையாது.
மற்ற நிமோனியா உருவாக்கும் தொற்றுகளான ஹீமோஃபிலஸ் இன்ப்ளூயன்சா பி , நியெமோகாக்கல்
போன்ற தொற்றுகளுக்கு போடும் தடுப்பூசி கொரோனா வைரஸால் வரும் நியூமோனியாவை தடுக்காது.
❌ மூடநம்பிக்கை 6❌
மூக்கில் சலைன் சொட்டு மருந்து விட்டுக்கொண்டே இருந்தால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாது.
தவறு
✅ மூக்கில் சொட்டு மருந்து விட்டால் கொரோனா வைரஸ் ஏற்படாது என்று எந்த அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி முடிவுகளும் இல்லை. எனவே , மூக்கடைப்பு நீக்கும் சொட்டு மருந்துகளை வாங்கி நீங்களாகவே சுய மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.
தேவைக்கு மீறி அதிகமாக மூக்கடைப்பு நீக்கும் சொட்டு மருந்து உபயோகித்துக்கொண்டே இருந்தால் மருந்தின் தன்மையால் மூக்கடைப்பு ஏற்படும் நிலை உருவாகும். இதை Rhinitis Medicamentosa என்று அழைப்போம்.
மூக்கை சலைன் ஊற்றி நன்றாக க்ளியர் செய்து வைப்பது வைரஸ் தொற்று எளிதாக உள்ளே செல்ல வழிவகை செய்யும் என்பதையும் அடிக்கோடிடுகிறேன்
❌மூடநம்பிக்கை 7❌
பூண்டு , மஞ்சள் , கீழாநெல்லி போன்றவற்றை எடுப்பது கொரோனா தொற்று ஏற்படாமல் காக்கும்
தவறு.
பூண்டு / மஞ்சள் போன்றவற்றிற்கு கிருமிகளை கொல்லும் தன்மை இருக்கிறது என்று அறியப்பட்டிருக்கிறது.
இருப்பினும் வைரஸ்களை கொல்லும் தன்மை குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் ஆரம்பகட்டத்திலேயே இருக்கின்றன
கீழாநெல்லி கல்லீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு வேலை செய்யும் என்று ஆய்வு முடிவுகள் உள்ளன.
இருப்பினும் அதை கொரோனா தொற்றுக்கு உபயோகிப்பதை எந்த அறிவியல் ஆராய்ச்சியும் ஆதரிக்கவில்லை.
பூண்டு/ மஞ்சள் போன்றவற்றை தினசரி அதன் நல்ல விஷயங்களுக்காக உணவில் சேர்த்து வருவது என்பது வேறு. அவற்றை உண்டால் கொரோனா வராது என்று நம்புவது வேறு. இரண்டையும் குழப்பிக்கொள்ள கூடாது.
நாம் பரப்பும் இந்த மூட நம்பிக்கையை நம்பி ஒருவர் முக்கியமான நேரத்தில் மருத்துவமனையை நாடாமல் பூண்டு கஷாயம் குடித்து வீட்டிலேயே இருந்து விடும் வாய்ப்பு உண்டு.
கொரோனா குறித்த மூடநம்பிக்கைகளை அறிவியல் பார்வையில் தகர்ப்பது நமது முக்கிய குறிக்கோள்
தொடர்ந்திருப்போம்
Dr. ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை