
இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் லாபம்.
விவசாயிகளை மையப்படுத்திய படமாக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.குன்றத்தூர் பகுதியில் உள்ள பெருவயல் என்ற ஏரியாவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. அப்போது விஜய்சேதுபதி அந்த கட்டிடத்தை செட்டாக போடாமல் உண்மையான கட்டிடத்தையே கட்ட சொல்லி இருக்கிறார். மேலும் படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கட்டிடத்தை அந்த ஊர் 👥மக்களுக்கே கொடுக்க சொல்லி இருக்கிறார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
[youtube-feed feed=1]