மும்பை:

மும்பையில் தொடங்கப்பட்ட பிரதமரின் குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பிரதன் மந்திரி அவாஸ் யோஜ்னா என்ற குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. மும்பையில் 3 கட்டுமான திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இங்கு 6 ஆயிரத்து 415 வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்ட நிலத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இவ்வாறு வழங்கப்பட்ட நிலங்கள் ஏற்கனவே இதர பொது திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனால் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

வசாய்ஸ் ஜூசந்திரா பகுதியில் 50 ஹெக்டேர் நிலத்தில் 3 ஆயிரத்து 630 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இந்த பகுதி அடர்த்தியான மாங்குரூவ் பகுதியில் வருகிறது. இந்த பகுதி வனப்பகுதிக்கு ஒதுக்கப்பட்டதாகும். இங்கு எவ்வித மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ள அனுமதியில்லை என்று மகாராஷ்டிரா மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வீடு கட்டும் திட்டத்தை மகாராஷ்டிரா அரசின் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் தான் செயல்ப டுத்தும் முகமையாக உள்ளது. இந்த பகுதியை குடியிருப்பு பகுதியாக மாற்ற நகர்புற மேம்பாட்டு துறையிடம் அளிக்கப்பட்ட விண்ணப்பம் சுற்றுசூழல் பாதிப்பு காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் ராய்காத் காலாப்பூரில் 11 ஹெக்டேர் நிலத்தில் 2 ஆயிரத்து 685 வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியது. இந்த பகுதி பொழுதுபோக்கு திறந்தவெளி மற்றும் பொது நிறுவனங்களுக்கு ஒது க்கப்பட்ட பகுதியாகும். இந்த பகுதியையும் குடியிருப்பு நிலமாக மாற்ற நகர்புற மேம்பாட்டு துறை அனுமதி மறுத்துள்ளது. அதனால் இங்கு வீடு கட்டும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இதேபோல் ராயகாந்த பென் என்ற பகுதியில் ஆயிரத்து 100 வீடுகள் கட்ட மத்திய குழு அனுமதி வழங்கியது. இந்த பகுதியும் இதர ஆரம்ப பள்ளி ம்றறும் விளையாட்டு மைதானம் அமைப்பது உள்ளிட்ட பொதுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதி என்பதால் வீடு கட்டும் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தம் 33 ஆயிரத்து 510 வீடுகள் 11 திட்டங்களாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு பூமி பூஜை நடத்தப்பட்டுள்ளது. மும்பை, தானே உள்ளாட்சி தேர்தலுக்கு முன் இந்த திட்டத்தை தொடங்க பாஜக அரசு அவசர அவசரமாக தொடங்கியது. முறையான அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளுக்கான டெண்டரை மாநில அரசு வெளியிட்டு பின்னர் நிறுத்தியது.

இது வரை 2 திட்டங்களுக்கு மட்டுமே பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 திட்டங்களுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த 4 திட்டங்களிலும் 10 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளது. இதர ப குதியில் இந்த திட்டங்களை செயல்படுத்த முடியாத காரணத்தால் குறைந்த செலவில் வீடு கட்டும் திட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.