சென்னையில் நேற்று நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் 50க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ஜாஃபர் காவல்துறையினரின் என்கவுண்டரில் இன்று கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது குற்றவாளி தொடர்பான விவரம் தெரியவந்ததை அடுத்து ஆந்திர மாநில ரயில்வே காவல்துறையினருக்கு இதுகுறித்த தகவலை சென்னை மாநகர காவல்துறையினர் வழங்கினர்.

இந்த தகவலை அடுத்து நெல்லூர் ரயில்நிலையத்தில் மேற்கொண்ட சோதனையின் போது தமிழ்நாடு காவல்துறையால் தேடப்படும் குற்றவாளி அந்த ரயிலில் பயணம் செய்வது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவனை கைது செய்த ஆந்திர போலீசார், சென்னை மாநகர காவல்துறையினரிடம் அவனை ஒப்படைக்க உள்ளனர்.