செரினா அதிர்ச்சி தோல்வி: சாதனை படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்

Must read

நியூயார்க்கில் நடைபெற்ற யு.எஸ் ஓப்பன் டென்னிஸில் முலகின் முதல் நிலை வீராங்கனை செரினா வில்லியம்ஸ் செக் குடியரசின் கரோலினா ப்ளிஸ்கோவாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இப்போட்டியில் அவர் வென்றிருந்தால் 23-வது முறையாக க்ராண்ட் ஸ்லாம் பட்டம் வென்று ஜெர்மனி வீரங்கனை ஸ்டெபி கிராபின் சாதனையை முறியடித்திருப்பார்.
download
சர்வதேச பெண்கள் டென்னிஸில் வெகுகாலமாக முதலிடத்தில் இருந்து வருபவர் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ். இவர் தற்போது நடைபெற்றுவரும் யு.எஸ் ஓப்பன் டென்னிஸ் போட்டியின் அரை-இறுதிப்போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கரோலினா ப்ளிஸ்கோவாவிடம்  6-2,7-6(5) என்ற நேர் செட் கணக்கில் தோல்வியைத் தழுவினார். இந்தத் தோல்வி முலம் அவர் தனது நம்பர் ஒன் இடத்தையும் நழுவவிட்டார். தனது இடது முழங்காலில் இருந்த வலியே இம்முறை தமது தோல்விக்குக் காரணம் என்று செரீனா குறிப்பிட்டார்.
செரீனா இழந்த முதலிடத்தை ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் பெற்று இப்போட்டியில் இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளார். இவர் டென்மார்க்கின் கரோலினா வோஸ்னியாக்கியை இதில் கெர்பர் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இவர் அமெரிக்க ஓப்பன் டென்னிஸின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறை.

More articles

Latest article