பாரா ஒலிம்பிக்:  'தங்க' மாரியப்பனுக்கு ரூ. 2 கோடி:  ஜெயலலிதா பரிசு! மோடி வாழ்த்து!!

Must read

சென்னை:
ரியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று, வரலாற்று சாதனை நிகழ்த்திய தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக அரசு சார்பில் 2 கோடி பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறி உள்ளார். மேலும் மாரியப்பனுக்கு பாரத பிரதமர் மோடியும் வாழ்த்து கூறி உள்ளார்.
பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று சாதனை படைத்தார். உயரம் தாண்டும் போட்டியில் அவர் 1.89 மீட்டர் தாண்டி தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.
1-para-oneuntitled-1
தங்கம் வென்று வராலாற்று சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக அரசு ரூ. 2 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. தங்கம் வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் மாரியப்பன் பெருமை சேர்த்துள்ளார் என்று முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்தது செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, மாரியப்பன் தங்கவேவேலுவுக்கு மத்திய அரசு ரூ. 75 லட்சம் பரிசுத்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனீரோ நகரில் தற்போது நடைபெற்று வரும் மாற்றுதிறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த 7-ந்தேதி தொடங்கி வரும்  18-ந்தேதி வரை நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து மாற்றுத்திறனாளிகள் 19 பேர் கலந்துகொண்டுள்ளனர். இவர்களில்  16 வீரர்களும், 3 வீராங்கனைகளும் அடங்குவர்.
வில்வித்தை, தடகளம், பளுதூக்குதல், நீச்சல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 5 விளையாட்டுகளில் 20 பிரிவுகளில் இந்திய வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நேற்று இரவு நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேல் தங்கம் வென்று இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும்  பெருமை சேர்த்துள்ளார். உயரம் தாண்டும் போட்டியில் அவர் 1.89 மீட்டர் தாண்டி தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
இதே உயரம் தாண்டும் போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த வருண்சிங் பட்டிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது.  1.86 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலம் வென்றார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் மற்றும் வெண்கலம் வென்ற வருண் சிங் பட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இருவரும் நாட்டுக்கு பெருமை சேர்த்து இருப்பதாக தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

More articles

Latest article