27 ஆண்டுகளுக்கும் மேலாக மகளிர் டென்னிஸ் உலகில் கோலோச்சி வருபவர் 40 வயதான செரினா வில்லியம்ஸ்.

வீனஸ் வில்லியம்ஸ், செரினா வில்லியம்ஸ் சகோதரிகளில் ஒருவரான செரினா தற்போது நடைபெற்று வரும் யூ.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற யூ.எஸ். ஓபன் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோமலஜனோவிக்-கிடம் 7-5, 6-7 (4/7), 6-1 என்ற கணக்கில் போராடி தோற்றார்.

போட்டியில் தோல்வியடைந்த தொடர்ந்து ஏற்கனவே கூறியது போல் தனது ஓய்வையும் அறிவித்தார். அவருக்கு அரங்கத்தில் குழுமி இருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் விடைகொடுத்தனர்.

ஆட்டுக்குட்டி ஈமோஜி-யுடன் ட்விட்டரில் இந்த ஆண்டு அதிகம் பகிரப்பட்ட செரினா வில்லியம்ஸ் குறித்த பதிவுகள் இனி இடம்பெறாது என்பதால் #GOAT தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.

தவிர இதுவரை 23 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ள செரினா வில்லியம்ஸ் ரசிகர்களும் அவரின் விளையாட்டுத் துறை சாதனைகளைப் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.