செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களை வழங்க ஆகஸ்ட் 29,30,செப் 1-ல் டோக்கன் விநியோகம்

Must read

சென்னை:
செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களை வழங்க ஆகஸ்ட் 29,30,செப் 1-ல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என நுகர்பொருள் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து வரும் நிலையில் இந்த நான்கு மாதங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இலவச ரேஷன் பொருள் வழங்குவதற்கு முன்பே வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை அதிகாரிகள் டோக்கன்கள் வழங்கி வருகின்றனர் என்பதும் அந்த டோக்கன்களை வைத்து பொதுமக்கள் ரேஷன் கடைகளில் இலவச பொருட்களை வாங்கிக் கொள்வார்கள். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக ஏற்கனவே டோக்கன்கள் வழங்கப்பட்டு இலவச அரிசி மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன்கள் ஆகஸ்ட் 29,30,செப் 1-ல் டோக்கன் வழங்கபடும் என்றும், நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் மோக்கன் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

More articles

Latest article