டில்லி,
டந்த இரண்டு ஆண்டுகளில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில், இந்த வருடம் செப்டம்பர் மாதம்தான் அதிக அளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிப்பாரா….?
இதுகுறித்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், ரிசர்வ் வங்கியை மேற்கோள் காட்டி இன்று வெளியிட்டுள்ள செய்தியில் அதற்கான ஆதாரப்பூர்வ தகவலை கொடுத்துள்ளது.

இது எப்படி….? வியப்பை ஏற்படுத்துகிறது…. இதுகுறித்து  மோடியும், நிதி அமைச்சரும் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் கோரி வருகின்றனர்.
இந்த மாதம்தான் ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அறிவித்தார். அதுவும் கடந்த வாரம்தான்… 8ந்தேதி அன்று இரவுதான் அறிவித்தார்…. இந்திய பிரதமர் மோடி.
இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது.
பணம் சரிவரி கிடைக்காததால் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை விபரீதமாக போய்க்கொண்டிருக்கிறது.
modi-cry
ஆனால், பெரும் பணக்காரர்களோ கடந்த மாதமே தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் சேமித்து விட்டார்கள்.
நமது பிரதமரோ, பணம் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது என்றும், அதனால் எனது உயிருக்கு கருப்பு பண முதலைகளால் ஆபத்து என்றும் கண்ணீர் விடுகிறார்…
ஆனால், அவர் அவ்வாறு பேசிகொண்டிருக்கும்போதே, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் பற்றிய விவரம் வெளியே தெரிய வந்துள்ளது….
அதுவும் மோடி பணம் செல்லாது என்று அறிவிப்பு வெளியிடுவதற்கு முந்தைய மாதமான செப்டம்பர் மாதம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் பற்றிய விவரம் வெளிவந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளை விட இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5.98 லட்சம் கோடி, அதாவது தோராயமாக 6 லட்சம் கோடி அளவுக்கான பணம் கடந்த மாதத்தில் மட்டும் டெபாசிட் செய்யப்படப்பட்டுள்ளது.
ie-chart
இது கடந்த ஆண்டை விட 6.2 சதவிகிதம் அதிகம்.
இவ்வளவு பெரிய தொகை எப்படி டெபாசிட் செய்யப்பட்டது….? டெபாசிட் செய்தவர்களுக்கு முன்கூட்டிய பணம் செல்லாது என்ற செய்தி தெரியுமா?  அல்லது கருப்பு பணம் ஒழிப்பு என்ற பெயரில் இந்த செய்தி தனக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கும், கட்சிக்காரர்களுக்கும்  ரகசியமாக தெரியப்படுத்தப்பட்டதா?
இந்த அளவுக்கு அதிகமாக டெபாசிட் செய்த பண முதலைகள் யார்? அந்த பணத்திற்கு அரசாங்கம் வசூலித்த வரி எவ்வளவு? என்ற விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் பகிரங்கமாக வெளியிட  வேண்டும் என்று எதிர்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆதே வேளையில் இந்த ஆண்டு 7வது  ஊழியக்குழு அறிக்கை அமல்படுத்தியதால், கிடைக்கப்பெற்ற பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சகம் கூறலாம்.
money-modi
ஆனால், நமது நிதி அமைச்சர் அருண்ஜெட்லி இதுகுறித்து ஜூலை மாதம் அறிவித்தபோது, 7வது ஊதியக்குழு அமல்படுத்துவதால் ரூ.1.02 லட்சம் கோடி மட்டுமே அரசுக்கு அதிக செலவு என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதோ 5.98 லட்சம் கோடி. இதில் 1.02 லட்சம் கோடியை கழித்துவிட்டாலும் மீதமுள்ள 4.96 லட்சம் கோடி  பணம் டெபாசிட் எப்படி வந்தது….?
மக்களை ஏமாற்றுகிறாரா…. பிரதமர்… ? இதற்கு தகுந்த விளக்கம் தேவை என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் எதிர்பார்க்கின்றனர்.
பகிரங்கப்படுத்துவாரா மோடி….