டில்லி,
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, 1000 நோட்டுக்கள் வரும் 24ந்தேதி வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். அன்றாட தேவைக்கு பணம் கிடைக்காமல் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து, பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் பெட்ரோல் பங்குகள் உள்ளிட்ட சில இடங்களில் வரும் 24ம் தேதிவரை செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
black_moneys
ஏற்கனவே,  கடந்த வெள்ளிக்கிழமை வரை பெட்ரோல் பங்குகள், அரசு மருத்துவமனைகள், டோல் பூத்துகளில் அவை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது. பிறகு இது இன்று இரவு (நவம்பர் 14ம் தேதி) நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.
ஆனால், மக்கள் மத்தியில் இன்னமும் பணப் புழக்கம் அதிகரிக்காததால், இந்த காலக்கெடு இம்மாதம் 24ந் தேதி நள்ளிரவு வரை நீடிக்கப்பட்டுள்ளது.
sakthi
இத்தகவலை பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சக்திகாந்த் தாஸ் இன்று டெல்லியில் அறிவித்தார்.
மூத்த அமைச்சர்களுடன் மோடி நேற்றிரவு நடத்திய அவசர ஆலோசனையின்போது, இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
எனவே, 24ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை பழைய நோட்டுக்கள் மேற்சொன்னபடி, அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்குகள், டோல் கேட்டுகளில் செல்லுபடியாகும்.