சென்னை: இணையம் சார்ந்த தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் (Gig) தொழிலாளர்கள் நல வாரியம் (Tamil Nadu Platform Based Gig Workers Welfare Board)” எனும் புதிய நலவாரியம் தோற்றுவித்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தபடி, இணைய செயலிகள் வாயிலாக வழங்கப்படும் வாடகை வாகன சேவைகள், உணவு, மளிகை உள்ளிட்ட அனைத்து டெலிவரி சேவைகளில் பணிபுரியும் அமைப்பு சாரா கிக் (Gig) தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென தனி நலவாரியத்தை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Patrikai.com official YouTube Channel