சென்னையில் பல்வேறு இடங்களில் குறிப்பாக பள்ளிப் பகுதியில் மோட்டார் பொறுத்தப்படாத வாகனங்கள் செல்வதற்கான தனி பாதையை உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
சைக்கிள், ஸ்கேட் போர்டு மற்றும் பாதசாரிகளுக்கு என்று பிரத்யேக வழித்தடத்தை கட்டமைக்கத் தேவையான வழிகளை மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது.
சுரங்கப் பாதைகள், மேம்பாலங்கள் மற்றும் நடைபாதைகளுக்கான இடங்களை அடையாளம் காணும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
மாநகராட்சியின் இந்த புதிய திட்டத்திற்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் மின்சாரம், குடிநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து இதை செய்யப்படுத்துவதில் அதிக சிக்கல் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பள்ளி செல்லும் மாணவர்களுக்கு இந்த வழித்தடம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டாலும் இதன் பராமரிப்பை பொறுத்தே இந்த திட்டத்தின் வெற்றி அமையும் என்று கருதப்படுகிறது.