பெங்களூரு:

‘கர்நாடக மாநிலத்துக்கு மஞ்சள், வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களைக் கொண்ட மூவர்ணக் கொடி  உருவாக்கப்பட்டு உள்ளது.  கொடியின் மத்தியில் உள்ள‌ வெள்ளை நிறத்தினுள் ‘கன்டபெருன்டா’  எனப்படும் கர்நாடக அரசின் சின்னம் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கொடிக்கு கன்னட கலாச்சாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்த நிலையில், கர்நபாடக அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த கொடியை கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் அறிமுகப்படுத்தினார்.

கர்நாடக மாநிலத்துக்கென தனிக்கொடி உருவாக்கப்படும் என கர்நாடக முதல்வர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், அதற்காக 9 பேர்  கொண்ட  தனி குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினரின் ஒப்புதலின் பேரில் தனிக்கொடி தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக கர்நாடக அரசு மாநிலம் உதயமான தினத்தன்று (நவம்பர் 1-ம் தேதி) அரசு நிகழ்ச்சிகளில் கர்நாடகாவுக்கென தனி கொடி பயன்படுத்தப்பட்டு  வருகிற‌து.

இந்நிலையில், மத்திய அரசின் அனுமதியில்லாமல் கொடி உபயோகப்படுத்தி வருவது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து கர்நாடகாவுக்கு என தனிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கொடிக்கு  கன்னட கலாச்சாரத்துறை அனுமதி அளித்துள்ள நிலையில், தற்போது கர்நாடக அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து தனிக்கொடிக்கு அனுமதி அளிக்குமாறு மத்திய அரசிடம் அனுமதி  கோர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த கொடியை செய்தியாளர்களிம் கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிமுகப்படுத்தினார்.

ஏற்கனவே ஜம்முகாஷ்மீர் மாநிலத்திற்கென தனிக்கொடி உள்ள நிலையில், தற்போது கர்நாடகாவும் தனிக்கொடி வடிமைத்துள்ளது குறிப்பிப்பிடத்தக்கது.