திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Must read

சென்னை:
திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பணிபுரிந்த காலத்தில் உயிர் இழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தலா 3 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று, உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவியை வழங்கியபின் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக குழு மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கையை தயாரித்து வருவதாகவும், அதில் ஆசிரியர் சங்க கோரிக்கையும் இடம்பெறும் என நம்புவோம் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Support patrikai.com

நேர்மையான, வெளிப்படையான, சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

More articles

Latest article