சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான போக்குவரத்துக் கழக மோசடி வழக்குகளை சேர்த்து விசாரிக்கக்கூடாது,  தனித்தனியாக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை  உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஏராளமான ஊழல் செய்ததாக, அவர்மீது திமுக தரப்பில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டது. அத்துடன்,  போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாகவும் அவர்மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்குகளில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருந்த நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கிய பெயில் காரணமாக, மீண்டும் அமைச்சராக தொடர்ந்து வருகிறார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான அனைத்து ஊழல் வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க செந்தில் பாலாஜியின் கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து,   ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, வழக்குகளை தனித்தனியாக விசாரிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.