சென்னை: சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது, சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த  அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம்  ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கிள்ள திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது சிறை வாழ்க்கை ஓராண்டை நெருங்கி உள்ளது. இதற்கிடையில், பெண் போலீசார் குறித்து தூறாக பேசியதாக சவுக்கு சங்கரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது சிறை வாழ்க்கை 2வது மாதமாக தொடர்கிறது.

இதற்கிடையில், அப்போதைய  அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி குறித்து யுடியூபர் சவுக்கு சங்கர் கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார். இதுதொடர்பாக கடந்த  கடந்த 2022ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி சவுக்கு சங்கருக்கு எதிராக  அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இனறு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த  ன்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இந்த வழக்கில் வரும் ஜூலை 9-ஆம் தேதி இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவித்து வழக்கை  ஒத்திவைத்தார்.