சென்னை: அமலாக்கத்துறை கைது செய்ததைத்தொடர்ந்து நெஞ்சுவலி என கூறி மருத்துவமனையில் ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர், விசாரணைக்கு ஆஜராகி கூறி 4 முறை சம்மன் அனுப்பியும்,  விசாரணைக்கு  ஆஜராகவில்லை  என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

பத்துரூபா பாலாஜி என பொதுமக்களால் அழைக்கப்படும் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இதுதொடர்பாக அமலாக்கத்துறை அவரது வீடுகளில் சோதனை நடத்தியதுடன், அவரிடமும் விசாரணை நடத்தி, பின்னர் கைது செய்தது. இதையடுத்து நெஞ்சு வலிப்பதாக கூறிய செந்தில்பாலாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. தற்போது, தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் தமிழகஅரசின் ஆதரவுடன் சொகுசா இருந்து வருகிறார்.

இதற்கிடையில்,  செந்தில் பாலாஜி வழக்கில்  அவரது,  சகோதரர் அசோக் நேரில் விசாரணைக்கு வர வேண்டும் என் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகின்றனர்.  இதுவரை 4 முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் இதுவரை ஒருமுறை கூட நேரில் ஆஜராகவில்லை. இதனால் அவரை தேடும் பணி அமலாக்கத்துறையால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 27ஆம் தேதிக்குள் அவர் நேரில் ஆஜாரவில்லை என்றால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், செந்தில் பாலாஜி சகோதரர்  அசோக்கிற்கும், அமைச்சரைப் போல  நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால்  அவரால் விசாரணைக்கு வரமுடியவில்லை என்றும், அவருக்கு வீட்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அவரது வழக்கறிஞர்கள் கூறியதாக தகவல்கள் பரவி வருகின்றனர். நெஞ்சுவலி காரணமாக,  அசோக் ஆஜராக மேலும் 4 வார காலம் அவகாசம் வேண்டும் என்றும் அமலாக்கத்துறையினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.