சென்னை
கடந்த 2011 ஆம் ஆண்டு திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் குறித்து எந்த வாக்குறுதியும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இன்றைய கேள்வி நேரத்தின்போது அமைச்சர் செந்தில்பாலாஜி,,
“திமுக அரசின் சாதனைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், சாட்டையால் கூட அடித்துக்கொண்டார்கள்.
அப்படியும் எதுவும் நடக்காததால், இறுதியில் சம்பந்தமே இல்லாத இடத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.
எந்த எப்.ஐ.ஆரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்று கேட்டதற்கு, இன்றுவரை பதில் இல்லை.
2021 தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் குறித்தும், பூரண மதுவிலக்கு என வாக்குறுதியும் இல்லை. இருப்பினும், 603 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.”
என்று தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel