சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனராக செந்தாமரைக்கண்ணன் இன்று பொறுப்பேற்கிறார். தற்போது பணியில் உள்ள புவியரசன் மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை, வானிலை ஆய்வு மையமானது நுங்கம்பாக்கத்தில் கல்லூரிச்சாலையில் குட் செப்பர்ட் பள்ளி மற்றும் கிறித்துவ பெண்கள் கல்லூரி ஆகியவற்றுக்கிடையில், பழைய எண் 50 (புதிய எண்.6) என்ற இடத்தில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில், ஐதராபாத், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமையப் பெற்றுள்ள மூன்று வானிலை ஆய்வு மையங்கள் சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த வானிலை ஆய்வு மையங்கள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சேவையாற்றி வருகின்றன.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் துணைஇயக்குனராக இருந்த ரமணன் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 31ந்தேதியுடன் ஓய்வு பெற்றார். அதையடுத்து, அவரது இடத்துக்கு வந்தவர் பாலச்சந்திரன். அதுபோல, வானிலை ஆய்வு மையத்தின், சூறவாளி, புயல் எச்சரிக்கை  பிரிவு இயக்குனராக இருந்து வருபவர் புவியரசன்.
சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எந்தவொரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை. இது கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாது. வானிலை ஆய்வு மையத்தில் சில கருவிகள் பழுதாகி உள்ளதால், முன்கூட்டியே கணிக்க முடியவில்லை என்று கூறப்பட்டது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.  இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார. வானிலை மையத்தின் அக்ரோமெட் ஆலோசனை சேவை பிரிவு தலைவராக இருந்து வந்த செந்தாமரைக் கண்ணன் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், இன்று புதிய இயக்குனராக பதவி ஏற்கிறார்.