
டில்லி
இன்று பங்கு வர்த்தகத்துறையில் வரலாறு காணாத அளவுக்கு சென்செக்ஸ் புள்ளிகள் 10000 ஆக இன்று காலை முதல் காணப்படுகிறது.
இன்று காலையில் துவங்கிய தேசிய பங்குச் சந்தை நிலவரப்படி, நிஃப்டியில் சென்செக்ஸ் பாயிண்டுகள் ஆரம்பத்திலேயே 10011.30 உயர்ந்து காணப்பட்டது. ஆரம்பத்திலேயே இவ்வளவு உயர்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும். நேற்று காலையில் 9982.05 ஆக இருந்தது.
ஆரம்ப வாணிகத்தில் ஹீரோ மோடோ கார்ப்பொரேஷன், பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், பவர் கிரிட், எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கோடாக் வங்கி, எண்டிபிசி, பஜாஜ் ஆட்டோ, அதானி போர்ட்ஸ், ஐடிசி ஆகிய நிறுவனக்களின் பங்குகள் விலை ஏற்றத்துடன் உள்ளன.
ரூபாய் மதிப்பு 5 பைசா குறைந்து, டாலர் ஒன்று ரூ.64.39 க்கு வந்துள்ளது.
[youtube-feed feed=1]