டில்லி

ச்சா எண்ணெய் விலை ஏற்றத்தாலும் கர்நாடக அரசியலாலும் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

சர்வ தேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரலுக்கு 80 டாலராக உயர்ந்துள்ளது.

அத்துடன் கச்சா எண்ணெய் தேவை உற்பத்தியை விட அதிகரித்துள்ளதால் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு உண்டாகி வருகிறது.

இந்த கச்சா எண்ணெய் விலை ஏற்றம் மற்றும் கர்நாடக மாநில அரசியல் ஆகியவை பங்குச் சந்தையில் கடும் தாக்கம் ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை முதல் வீழ்ச்சி கண்டு வரும் சென்செக்ஸ் தற்போது 100 புள்ளிகள் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இது முதலீட்டாளர்கள் இடையே பரபரப்பை உண்டாக்கி உள்ளது.