மும்பை

இன்று நிதிநிலை அறிக்கையின் போது சரிந்த பங்குச் சந்தை மீண்டும் எழுந்துள்ளது

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி 2018-19 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.   அதைத் தொடர்ந்து மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் குறியிட்டெண்  மளமள வென சரிந்தது.

மும்பை பங்குச் சந்த குறியீட்டெண் சென்செக்ஸ் 374 புள்ளிகள் சரிந்து 35590 ஆக ஆனது.   தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 115 புள்ளிகள் சரிந்து 10912 ஆகியது.   நிதிநிலை அறிக்கை படித்து முடிந்த போது இந்த நிலையில் இருந்தது.   அதன் பின்னர் சிறிது சிறிதாக தற்போது மீண்டும் எழுந்து வருகின்றது.