சென்னை: திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்.

அதிமுக பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பியுமான அன்வர் ராஜா அதிமுக தலைமைமீது அதிருப்தியில் இருந்து வந்த நிலையில், அவர் கட்சி மாறலாம் என தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், அன்வர் ராஜா இன்று காலை அண்ணா அறிவாலயம் வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, அவர் திமுகவில் இணைய இருப்பது உறுதியானதால், அதிமுக தலைமை அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அன்வர் ராஜா, தன்னை திமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்வர் ராஜா, எடப்பாடி பழனிச்சாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ஒப்பாறும் மிக்காறும் இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டியவர் அன்வர் ராஜா, மு.க.ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராவார். தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினுக்கு இணையான தலைவர்கள் இல்லை. இம்முறை 15% கூடுதல் வாக்குகள் பெற்று தி.மு.க. வெல்லும். * ருத்தியல் ரீதியாக ஒன்றாக பயணிக்க என்னை தி.மு.க.வில் இணைத்துக்கொண்ட முதல்வருக்கு நன்றி கூறியவர், ஒரு தலைவரை நம்பித்தான் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களிப்பார்கள், ஆனால், அ.தி.மு.க.வில் தற்போது நிலையான தலைவர்கள் இல்லை. இனி நிலையான தலைவர்கள் வருவார்களா என தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
பிரிந்த அதிமுக இணைவதில் எடப்பாடி பழனிச்சாமி ஆர்வம் இல்லை என்று கூறியவர், 7 முன்னாள் அமைச்சர்கள் இணைந்து அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியதாகவும், ஆனால், அதை ஏற்க எடப்பாடி பழனிச்சாமி மறுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாடு மக்கள் அதிமுக பாஜக கூட்டணியை விரும்பவில்லை என்ற விமர்சித்தவர், பாஜக கையில் அதிமுக சிக்கியுள்ளது, மூன்று முறை பேட்டி அளித்த பாஜக அமைச்சர் அமித்ஷா, ஒருமுறைகூட முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். அதனால் நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என எடப்பாடியுல் உறுதிப்பட தெரிவிக்க முடியவில்லை என்றவர் கடந்த 10 நாள் பயணத்தில்கூட எடப்பாடியால் தான்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை உறுதிபடுத்த முடியவில்லை என்றார். நான்தான் போரை நிறுத்தினேன் என்று கூறுவது போல எடப்பாடி கூறிக்கொண்டே இருக்க வேண்டும்தான் என்றவர், மகாராஷ்டிராவில், கூட்டணி வெற்றி பெற்றதும், முண்டேவை துணைமுதல்வராக்கி, பட்னாவில் முதல்வராக்கி விட்டார்கள், அதுபோன்ற ஒரு நிலைதான் தமிழ்நாட்டிலும் ஏற்படும் என்றவர், நான் சந்தர்ப்பவாதி அல்ல, கொள்கை வாதி என்றும் கூறினார்.
Patrikai.com official YouTube Channel