டில்லி:
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வெளியிட்டு உள்ளார்.
நீதிபதி மணிக்குமார் கடந்த 2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர், 2009ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக பதவி உயர்ந்தார். தற்போது மூத்த நீதிபதியாக உள்ள அவர் உள்பட நாடு முழுவதும் உள்ள 8 உயர்நீதி மன்ற நீதிபதிகளை, உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிகளாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த நீதிபதியான மணிக்குரை, கேரள உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமனம் செய்து உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அறிவித்து உள்ளார்.
நீதியரசர் மணிக்குமார் விரைவில் கேரள உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பார் என்று கூறப்படுகிறது.