சென்னை: உடலமின்றி மறைந்த மூத்த கம்யூனிஸ்டு தலைவர் தா.பாண்டியன் உடல் நாளை மதுரை அருகே உள்ள அவரது சொந்த ஊரில்  நல்லடக்கம் செய்யப்படஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்த   இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன் (வயது 88) சிகிச்சை பலன்றி இன்று காலை காலமானார்.  சமீபத்தில் கொரோனா தாக்குதலுக்கு உள்ளான தா.பாண்டியன் அதிலிருந்து மீண்ட நிலையில், சிறுநீரக செயலிழப்பு காரணமாக நேற்று முன்தினம் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

தா.பாண்டியனின் மறைவுக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். . இந்த நிலையில், தா.பாண்டியன் உடல் சொந்த ஊரான உசிலம்பட்டி  அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டியில் நாளை மதியம் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தா.பாண்டியன் சென்னை அண்ணாநகரில் இருக்கும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.  மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தி.நகரில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டு நாளை மதியம் 2 மணிக்கு சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

 

[youtube-feed feed=1]