செங்கல்பட்டு அருகே சாலவாக்கத்தில், ஆம்புலன்ஸ் போல வடிவமைக்கப்பட்ட டாடா ஏஸ் வாகனத்தில் மூதாட்டி ஒருவர் கட்டாயப்படுத்தி கடத்திச் செல்லப்பட்டதாக புகார் எழுந்தது. காவல்துறையினரின் சோதனையில், போலி ஆம்புலன்சில் பெண் சடலத்துக்கு அருகே முதியவர் ஒருவர் படுக்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்தின் சமையலுக்கான காய்கறிகளுடன் அவர்களை கொண்டு சென்றுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே செயல்பட்டுவரும் பாலேஸ்வரம் செயின்ட் ஜோசப் கருணை இல்லத்துக்குச் சொந்தமான வேன் என்பது கண்டறியப்பட்டது.
வெளி நாட்டில் இருந்து வரும் நிதியை கொண்டு நடத்தப்படும் இந்த தொண்டு நிறுவனத்தில் மரணம் அடையும் முதியவர்களின் உடல்களை ஒரு இடத்தில் புதைத்து , சில நாட்கள் கழித்து அவர்களது எலும்புகளை எடுத்து பதப்படுத்தி அதில் இருந்து சட்டவிரோதமாக மருந்து எடுப்பதாக சில பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
இதனிடையே, செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்தில் இருந்த தஞ்சாவூரைச் சேர்ந்த ராபர்ட் கிளைவ் என்ற முதியவர், கூறியது அதிர்ச்சி அளித்தது. சென்னையில் செக்யூரிட்டி, துப்புரவுப் பணி போன்று கிடைத்த வேலைகளை செய்து வந்த இவர், வேலை முடித்தபின் சாலையோரமாக படுத்து உறங்கவது வழக்கம். அப்போது ஒருநாள், செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்தைச் சேர்ந்தவர்கள் குண்டுகட்டாகத் தூக்கி வந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே வேன் ஓட்டுநர் ராஜேஷை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, பாலேஸ்வரத்தில் உள்ள தொண்டு நிறுவனத்தில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் ராஜூ தலைமையில் 60 மேற்பட்ட பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.