சென்னை: மூத்த குடிமக்கள் இன்றுமுதல் மீண்டும் இலவச பயண டோக்கனுக்கான விண்ணப்பம் அளிக்கலாம் என சென்னை மாநகர போக்குரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கான டோக்கன்கள் வருகிற ஜூன் 21ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வழங்கப்பட இருக்கிறது.
60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பேருந்து பயணம் செய்யும் திட்டமானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது. கொரோனா அச்சம் காரணமாக எடப்பாடி ஆட்சியின்போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த திட்டத்தை, அடுத்து வந்த திமுக ஆட்சியும் மீண்டும் தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சென்னை மாநகர போக்குரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.
மாநகர் போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில், மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை மாநகருக்குட்பட்ட தகுதி வாய்ந்த மூத்த குடிமக்கள் உரிய ஆவணங்களுடன் வந்து இலவச பேருந்து பயணத்திற்கான டோக்கன்களை அருகில் உள்ள பணிமனைகளில் பெற்றுக் கொள்ளுமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த டோக்கன்கள் வருகிற ஜூன் 21ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வழங்கப்பட இருக்கிறது. மேலும் 42 பணிமனைகள், பேருந்து நிலையங்களில் டோக்கன் வழங்க இருக்கிறது. இந்த கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் டோக்கனை பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டை, வயது சான்றாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றுகளில் ஏதேனும் ஒன்று மற்றும் இரண்டு வண்ணப் புகைப்படங்களை சமர்ப்பித்து டோக்கனை பெற்று கொள்ளலாம். எனவே மூத்த குடிமக்கள் நேரம் தவறாமல் இப்பொழுதே விண்ணப்பித்து கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் டோக்கனை பெற்று கொள்ளுமாறு அரசு தெரிவித்துள்ளது.
60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது, 2016ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, குளிர்சாதன வசதி இல்லாத சென்னை மாநகர போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். இதற்கென மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும். பேருந்து நடத்துனரிடம் இந்த டோக்கன்களை கொடுத்து கட்டணம் ஏதும் இல்லாமல் மூத்த குடிமக்கள் பயணம் செய்யலாம்.
இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விழைவோர் அதற்குரிய படிவத்தில் தங்களது புகைப்படத்தினை இணைத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தை போக்குவரத்து துறையின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களிலும் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களில் கொடுத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். எந்தெந்த பஸ் டெப்போக்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பங்கள் கொடுப்பதற்கென கடைசி தேதி என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவைப்படுவோர் இதற்கான விண்ணப்பத்தை எப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம்.
ஆவணங்கள்
- விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் தேதியில் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்
- வயது சான்றாக ஆதார் அட்டை
- ரேஷன் அட்டை
- வாக்காளர் அட்டை
- ஓட்டுநர் உரிமம்
- பள்ளி சான்றிதழ் போன்ற சான்றுகளில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைத்து கையெழுத்திட்டு விண்ணப்பிக்க வேண்டும்
நிபந்தனைகள்
- அவர்களுக்கு அடையாள அட்டையுடன் டோக்கனும் வழங்கப்படும். இந்த அட்டை, டோக்கனை நடத்துனர்களிடம் காண்பித்து பயணம் செய்யலாம்.
- முக்கியமாக விண்ணப்பதாரர் நேரில் வந்தால் மட்டுமே அடையாள அட்டை வழங்கப்படும்.
- மாதந்தோறும் தலா 10 டோக்கன் வழங்கப்படும். ஒரு டோக்கனை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- அந்த டோக்கன் மூலம் அந்த பஸ்சின் கடைசி நிறுத்தம் வரை அவர்கள் பயணிக்கலாம்.
- ஏசி பஸ்கள் தவிர, மற்ற மாநகர பஸ்கள், சிறிய பஸ்கள் அனைத்திலும் அவர்கள் பயணம் செய்யலாம்
பொதுமக்களின் வரவேற்பை பெற்ற ‘மினி பஸ்’ஐ மீண்டும் இயக்க திமுக அரசு முடிவு…