பாட்னா: பீகாரின்  முதல்வராக சாம்ராட் சௌதரி  இன்று முற்பகல் (புதன்கிழமை) பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜகவின் மூத்த தலைவர் சாம்ராட் சௌத்ரி, புதன்கிழமையன்று பீகாரின் 21-வது முதலமைச்சராகப் பதவியேற்றார்; இதன் மூலம், அம்மாநிலத்தில் பாஜகவின் முதலாவது அரசை அமைத்து, இந்தி பேசும் மையப்பகுதி மாநிலமான பீகாரில் நிதிஷ் குமார் கடந்த இரண்டு தசாப்தங்களாகச் செலுத்தி வந்த ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒரு தீர்க்கமான அரசியல் மாற்றத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றிபெற்றது. இதையடுத்து ,பிஹாரில்  பிஹார் முதல்​வ​ராக 10-வது முறை​யாக பதவி வகித்து வந்தார்.  அவரது தலைமையில்,  பாஜக, ஐக்​கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), இந்​துஸ்​தான் அவாம் மோர்ச்​சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயக முற்​போக்கு கூட்​டணி ஆட்சி நடை​பெற்று வருகிறது.

இந்த நிலையில், ஐக்​கிய ஜனதா தள தலை​வர் நிதிஷ் குமார், அண்​மை​யில் நடந்த மாநிலங்​கள​வைத் தேர்​தலில் அவர் எம்​பி​யாக தேர்வு செய்​யப்​பட்​டார். கடந்த 10-ம் தேதி மாநிலங்​களவை எம்​பி​யாக அவர் பதவி​யேற்​றுக் கொண்​டார். இதையடுத்து அவர் தனது எம்எல்ஏ பதவியை ஏப்ரல் 14ந்தேதி அன்று   ராஜினாமா செய்தார்.

இதையடுத்து,  புதிய முதல்வராக பதவியேற்கும் பொருட்டு பாஜக சட்டமன்ற எம்எல்ஏ க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், , பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக சாம்ராட் சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்,  புதிய ஆட்சியமைக்க ஆளுநர் சையத் அதா ஹஸ்னைனிடம் சாம்ராட் சௌதரி கோரினார்.

இதைத்தொடர்ந்து இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது.  ஆளுநர் மாளிகையில், பதவியேற்பு விழாவில், மூத்த பாஜக தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் முன்னிலையில், ஆளுநர் சையத் அதா ஹஸ்னைன், சாம்ராட் சௌதரிக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

20 ஆண்டுகாலம் பிகாரின் முதல்வராக இருந்த நிதிஷ்குமாருக்குப் பின்னர், 21-வது பிகார் முதல்வராகவும், பிகாரில் பாஜகவின் முதல் முதல்வர் என்ற பெருமைகளையும் சாம்ராட் சௌதரி பெற்றுள்ளார்.ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் குமார் சௌதரி, துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

[youtube-feed feed=1]