செண்பகாதேவி அம்மன் கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.
குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. செண்பகாதேவி அம்மன் கோயில் பெருமையை குற்றால ஸ்தல புராணத்தில் சிறப்பாக பாடப்பட்டுள்ளது. இங்கு நாகம் மற்றும் புற்று அமைந்துள்ளது. செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலை சுற்றி விநாயகர் அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களின் சிலை மற்றும் பாறையில் செதுக்கப்பட்ட நந்தி சிவலிங்கம் போன்றவையும் உள்ளது. செண்பகாதேவி அம்மன் பெயரிலேயே இங்குள்ள அருவி செண்பகாதேவி அருவி எனப் பெயர் பெற்றது. அகத்திய மாமுனிவர் செண்பகாதேவி அம்மனை பிரதிஷ்டை செய்துள்ளார்.
இந்த ஆலயத்தில் கருவறை அர்த்தமண்டபம் மகா மண்டபம் என்ற அமைப்புகளுடன் உள்ளது. இங்கு லட்சுமி சரஸ்வதி தேவியருடன் இணைந்து செண்பகாதேவி அம்மன் கருவறையில் காட்சியளிக்கின்றனர். அம்மனுக்கு ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமி அன்று திருவிழா சிறப்பாக நடைபெறும். திருவிழா நேரத்தில் சில ஆண்டுகள் முன்பு வரை ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியன்று மழை பெய்யும். செண்பகாதேவி அம்மன் திருக்கோயிலில் பௌர்ணமி பொழுது மட்டும் அதுவும் மதியம் வரை மட்டுமே தற்போது மக்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். மற்ற நேரங்களில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது.