சென்னை
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகரை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த மாதம் கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக நடந்த பாராட்டு விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையன் புறக்கணித்தார்.
தொடர்ந்து செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. நேற்று முன் தினம் தொடங்கிய தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. சட்டசபையில் பழனிசாமியை சந்திப்பதையும் அவர் தவிர்த்தார்.,
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளான நேற்று செங்கோட்டையன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்வதை தவிர்த்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் சபாநாயகர் அறைக்கு சென்றார்.பி/ரகு வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட செங்கோட்டையன் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்றார்.
சபாநாயகரை சந்தித்தது ஏன்? என்பது குறித்து செய்தியாளர்களிடம் செங்கோட்டையன்
”கோபி தொகுதியில் உள்ள கொடிவேரி அணையில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் அளவிற்கு தண்ணீர் எடுக்கும் ஒரு தொழிற்சாலை அமைய இருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என விவசாயிகள் என்னிடம் மனு அளித்ததனர், இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுப்பதற்காகசபாநாயகரை சந்தித்தேன்.
இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அருகில் இருந்ததனர்.. எடப்பாடி பழனிசாமிக்கும் ,எனக்கும் எந்த முரண்பாடும் கிடையாது,, என்னுடைய கொள்கை உயர்வானது, பாதை தெளிவானது
என்றுவிளக்கம் அளித்தார்.