
சிறந்த இயக்குனராய் திகழும் செல்வராகவன், தற்போது நடிகராகவும் களமிறங்கவுள்ளார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் முதல் முறையாக நடிக்கவுள்ளார் செல்வராகவன். ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது.
செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்கவிருக்கிறார்.
யாமினி யக்னமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். நாகூரான் படத்தொகுப்பு பணிகள் மேற்கொள்கிறார். திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ராமு தங்கராஜ் கலை இயக்கம் செய்யும் இந்த படத்திற்கு நாகூரான் எடிட்டிங் செய்யவிருக்கிறார்.
தற்போது படக்குழுவினருடன் திரைக்கதையைப் படிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அருண் மாதேஸ்வரனின் முழுத் திரைக்கதையையும் படித்துவிட்டு இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பதிவில் அருண் மாதேஸ்வரனின் திரைக்கதையை இப்போதுதான் அவருடன் படித்து முடித்தேன். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் அசாதாரணமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]Just finished script reading with @arunmatheswaran ! In a word it’s ‘ EXTRAORDINARY ‘! @sidd_rao #SaaniKaayidham
— selvaraghavan (@selvaraghavan) December 19, 2020