தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர், செல்வராகவன்.
‘சாணி காகிதம்’ படம் மூலம் நடிகராக அறிமுகம் ஆகிறார். இன்னும் சில தினங்களில் ஷுட்டிங் ஆரம்பம்.
படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்த அனுபவம் பற்றி அவர் தெரிவித்த தகவல்:
“நடிப்பதற்கு எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் இதன் இயக்குநர் கதை சொன்ன விதமும், கதையும் எனக்கு பிடித்துப்போனது. நடிக்க ஒப்புக்கொண்டேன்.
நேரம் கிடைத்தால், சப்ஜெக்ட் பிடித்தால் மேலும் படங்களில் நடிக்க விருப்பம்” என்கிறார்.
தனுஷ் குறித்து கேட்டபோது அவர் “ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு நிறைய ‘ஹோம் ஒர்க்’ செய்வார்.அதன் பிறகே ஷுட்டிங் செல்வார்” என்ற செல்வா “படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் என்னை ‘சார்’ என்று தான் அழைப்பார்.
பெயர் சொல்லி நான் கூப்பிடுவேன்.ஆனால் கேரவனுக்குள் நுழைந்து விட்டால் ‘டேய்’ என்றே அழைத்துக்கொள்வோம்” என்று சிரித்தார்.
– பா. பாரதி