சென்னை

டந்த 2019 20 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெற்றோர் பட்டியல்  அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை மற்றும் பண்பாட்டினை வளர்த்தெடுக்கவும் தொன்மையான கலைவடிவங்களை பேணவும் கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது வழங்கி வருகிறது.   அவ்வகையில்.கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டிற்கான கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த பட்டியலில், பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, சவுகார் ஜானகி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ஐசரி கணேஷ், நடிகர் சிவகார்த்திகேயன், ராமராஜன், பின்னணி பாடகி ஜமுனா ராணி ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், யோகிபாபு, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவ தர்ஷினி, சங்கீதா, தொலைக்காட்சி நடிகைகள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், தொலைக்காட்சி நடிகர் நந்தகுமார் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தவிர இசையமைப்பாளர்கள் டி.இமான், தினா, இயக்குநர்கள் கவுதம் மேனன், மனோஜ் குமார், ரவிமரியா, லியாகத் அலிகான், வசனகர்த்தா பிரபாகர், ஒளிப்பதிவாளர் ரகுநாத ரெட்டி, நடன இயக்குநர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், சண்டைப்பயிற்சியாவார்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டவர்கள் நாளை மாலை 5 மணிக்குத் தலைமைச் செயலகம் வர அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது.