சென்னை:

கொரோனா வைரஸ் காரணமாக, தொற்றுவை தடுக்கும் முகக்கவசம் மற்றும் சானிடைசர் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பல வணிகர்கள், சந்தர்ப்பத்தை சாதகமாக்கி, அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இது தொடர்பான புகார்களைத் தொடர்ந்து,  கொரோனா அச்சுறுத்தலை சாதகமாக கொண்டு அத்தியாவசிய மருத்துவ பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இந்நிலையில் சானிட்டைசர், கை கழுவும் சோப், முக கவசம் போன்ற அத்தியாவசிய மருந்து பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறி அதிக விலைக்கு விற்பவர்கள் குறித்து மக்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 044 – 24321438 என்ற எண்ணுக்கோ அழைத்து புகார் அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

[youtube-feed feed=1]