சென்னை: தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம் பெருந்தலைவர் காமராஜர் என்று  முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி காமராஜர் நினைவு நாளையொட்டிடி புகழாரம் சூட்டி உள்ளார்.

பெருந்தலைவர் காமராஜரின் 50வது நினைவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் காமராஜருக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
காமராஜரின் 50வது நினைவுநாளையொட்டி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  புகழாரம் சூட்டி உள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள  பதிவில் கூறியிருப்பதாவது,
“தமிழகத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து ,
இந்திய நாட்டின் அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக வளர்ந்த மாமனிதர்,

எண்ணற்ற திட்டங்கள் மூலம்
ஏழைகளின் வாழ்விற்கு ஏற்றம் தந்து ,
வரலாற்றில் நீங்கா இடம் பெற்ற
எளிமையின் அடையாளம்;

தன்னலம் அறியாத வெள்ளை மனம், பொதுநல வாழ்வின் இலக்கணம்
“பெருந்தலைவர்” காமராஜர் அவர்களின் நினைவு நாளான இன்று,

இந்திய திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் கர்மவீரர் அவர்கள் ஆற்றிய பெரும் சேவைகளை போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.