சென்னை,

ன்று தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில், தமிழக மணல் மாபியா சேகர் ரெட்டியிடம் இருந்து வருமான வரித்துறையினர்  கைப்பற்றிய டைரியின் சில பக்கங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில், அதில் வெளியான பெயர்கள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8 மற்றும் 9ந்தேதி பிரபல மணல் காண்டிராக்டரான சேகர் ரெட்டியில் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய  அதிரடி சோதனையின்போது, ஏராளமான பணம், தங்கக்குவியல் உள்பட சொத்து ஆவனங்கள், முக்கிய டைரிகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.

தற்போது அந்த டைரியின் சில பக்கங்கள் வெளியாகி உள்ளது. அதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி.சம்பத், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பண்ணன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து,செய்தியாளர்கள் மு.க.ஸ்டாலிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஸ்டாலின், “லஞ்சப் புகாரில் சிக்கிய அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கூறினார். மேலும்,  டைரியில் வெளியாகி புகாருக்கு உள்ளாகி உள்ள  அதிமுக அமைச்சர்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும்,  வ்விவகாரத்தில் ஆளுநர் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.