சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி மகளுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த வரனான, திருப்பதி தேவஸ்தான நிர்வாகி தர்மான ரெட்டியின் மகன் சந்திரமௌலி ரெட்டி மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதை காவேரி மருத்துவமனை உறுதி செய்து, அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பிரபல தொழில்அதிபரான, சேகர் ரெட்டி மகளுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அதிகாரி மகன் சந்திரமவுலி என்பவருக்கு கடந்த 18ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
முன்னதாக, ரேசகர் ரெட்டி மகளுக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி தர்மா மகன் சந்திரமவுலிக்கும் (வயது 27) சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 26-ந் தேதி சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இந்த திருமணத்தில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொள்வதாக கூறப்பட்டது. இரு தரப்பினரும் திருமண அழைப்பிதழ்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கி வந்தனர்.
இந்த நிலையில், காவேரி மருத்துவமனை இன்று காலை வெளியிட்ட தகவலில், கடந்த கடந்த 18ந்தேதி சந்திரமவுலிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், இன்று (21ந்தேதி) காலை 8.20 மணியளவில் சந்திரமவுலி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இரு இருவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.