சென்னை: திருப்பரங்குன்றம் மலையில், தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதித்து வெளியிட்ப்பட்டுள்ள புத்தகத்தை பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசை கடுமையாக சாடி உள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின், நாளை தொடங்கி வைக்க இருக்கும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சியில், கீழைக்காற்றை பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகமான, “திருப்பரங்குன்றம் விவகாரம் -ஜி.ஆர்.சுவாமி நாதன்: நீதிபதியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவுடியா?” என்ற தலைப்பிலான புத்தகம் காட்சிப்படுத் தப்பட உள்ளது. அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தில், நீதிபதி ஒரு கையில் சூலத்தையும், மறு கையில் காவிக் கொடியையும் ஏந்தியிருப்பது போன்ற கேலிச் சித்திரம் இடம் பெற்றுள்ளது. இந்த பதிப்பகத் துக்கு அரங்கு எண் 172 மற்றும் 173 ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நீதித் துறையின் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் சீர்குலைக்கும் வகையில் இந்த புத்தகம் திட்டமிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அதுபோல, இந்நிலையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக களங்கம் விளைவிக்கும் வகையில் அவதூறு கருத்துக்களைக் கொண்ட புத்தகத்தை தடை செய்ய வேண்டும் எனக் கூறி வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை இன்று முற்பகல் நடைபெற்றது. அப்போது அரசை கடுமையாக சாடிய தலைமை நீதிபதி மதியம் 2மணிக்கு மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் ஆஜராக உத்தரவிட்டார். பின்னர் மதியம் நடைபெற்ற விசாரணையின்போது,
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஏ.ஆர்.ஆர். சுந்தரேசன் அந்த புத்தகத்தில் கலங்கப்படுத்தும் வகையில் வார்த்தைகள் உள்ளன என்றும் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மிகவும் அவதூறான களங்கம் ஏற்படும் வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என்றும் இதற்கும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமா என அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
மிகவும் தீ விரமான இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த புத்தகத்தை சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்ய எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்றும் நீதிபதி தமிழக அரசின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், அறிவு சார் தளமான சென்னை புத்தகக் கண்காட்சியில் இது மாதிரியான புத்தகங்களை அனுமதிக்க முடியுமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் சென்னை புத்தகக் கண்காட்சி நாளை (08.01.2026) தமிழக முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளதாகவும் இது போன்ற செயல்களை முதலமைச்சர் விரும்புவதில்லை என்றும் சென்னை புத்தகக் கண்காட்சி தமிழக அரசால் நடத்தப்படவில்லை என்றும் அது தனியார் பதிப்பக உரிமையாளர்களால் நடத்தப்படுகிறது என்று கூறியதுடன், சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்த புத்தகம் விற்பனை செய்யப்படாது என்பதை உறுதி செய்வதாகவும் அதற்காக காவல்துறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து சர்ச்சைக்குரிய அந்த புத்தகத்தின் பதிப்பாளர் கீழமைக் காற்று பதிப்பகம் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர உத்தர விட்ட நீதிபதிகள் இது தொடர்பாக கீழைக்காற்று பதிப்பாளர் மூன்று வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டார்.
மேலும், அந்த புத்தகத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்பதையும் புத்தகம் விற்பனை செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
[youtube-feed feed=1]