சென்னை: தினகரனின் சகோதரி ஸ்ரீதளாதேவி, அவரது கணவர் ரிசர்வ் வங்கி பாஸ்கர். இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு, 20 வருடங்களுக்கு மேல் நடைபெற்றது இந்த
இறுதியில் ஸ்ரீதளாதேவி, பாஸ்கர் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்தனர். அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் சரணடைய சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் இருவரும் இழுத்தடித்து வந்தனர். பிறகு சரணடைந்த இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட உடனேயே உடல்நிலை சரியில்லை என கூறி இருவரும், தங்களது உறவினர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்துள்ளனர். இது தொடர்பான புகார் அரசுக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. புழல் சிறை கூடுதல் கண்காணிப்பாளருக்கு தினந்தோறும் ரூ10,000 லஞ்சம் அளித்து, இருவரும் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்தது தெரியவந்தது., தற்போது கூடுதல் கண்காணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு சிறையில் வி.கே.சசிகலாவும் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சொகுசாக இருந்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.