கண்ணே கலைமானே படத்தை தொடர்ந்து சீனு ராமசாமியின் அடுத்த படத்தை டைம்லைன் சினிமாஸ் சார்பில் சுந்தர் அண்ணாமலை தயாரிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்த படத்தில் நாயகனாக நடிக்க அருள்நிதி ஒப்பந்தமாகியுள்ளார். அதனைத் தொடர்ந்து படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத் இணைந்துள்ளார். படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி, மற்ற நடிகர், நடிகைகள், இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.