தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்தவர்.

தற்போது விஜய்சேதுபதி வைத்து மாமனிதன் படத்தை இயக்கி வருகிறார் .

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் மாமனிதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது குருநாதருடன் மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதியின் இந்த புகைப்படம் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது .

[youtube-feed feed=1]