சென்னை

நாடக, திரைப்பட நடிகர் சீனு மோகன்,  விஜய் நடிக்கும் மெர்சல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கிரேசி மோகனின் நாடகக்குழுவில் முக்கிய நடிகர் சீனு மோகன்.  இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.   இவர் நடித்து கடைசியாக வெளிவந்த படம் இறைவி,       பின்பு இவர் நடித்த படம் எதுவும் வரவில்லை.

தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் படத்தில் சீனு மோகனுக்கு முக்கிய கதாபாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது,   இது பற்றி அவர் கூறுகையில் “விஜய் படத்தில் சான்ஸ் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று,  நான் இந்த வாய்ப்பை உடனே பயன் படுத்திக் கொண்டேன்.   அட்லியின் இயக்கம் என்பது இன்னொரு ப்ளஸ் பாயிண்ட்.   படத்தில் எனக்கு விஜயுடன் தோன்றும் காட்சிகள் நிறைய உள்ளதாக தெரிகிறது.   எப்போது ஷூட்டிங் ஆரம்பிக்கும் என ஆவலாக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் சீனு மோகன் கதாநாயகியின் தந்தையாக நடிக்கிறார் என்பதும் ஜூலை முதல் வாரம் முதல் படப்பிடிப்பு ஆரம்பம் ஆகும் என்பதும் கூடுதல் தகவல்